search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கே.சி.வீரமணி"

    வங்கி கடனுக்காக சொத்துகளை பிணயமாக வைத்து பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டண உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார். #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில் அளித்து பேசியதைத் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடம்; வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் வணிகவரி அலுவலகம் கட்டப்படும். மதுரை ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக் கட்டிடத்தில் மூன்று மின்தூக்கிகள் நிறுவப்படும்.

    பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தில் புதிய ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம் கட்டப்படும். தென்காசி பதிவு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம் கட்டப்படும்.

    வங்கி கடனுக்காக சொத்துகளை பிணயமாக வைத்து பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டண உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும். கடனுக்காக சொத்துகளின் மூல ஆவணங்களை வங்கியில் ஒப்படைத்து உடன்படிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.

    அந்த உடன்படிக்கைகளுக்கு மூன்றுமாத காலத்திற்குட்பட்டு அல்லது அதற்கு மேற்பட்டு என இரண்டுவித முத்திரைத் தீர்வை விதிக்கப்படுகிறது. அந்த முத்திரை தீர்வை மற்றும் பதிவுக் கட்டணத்திற்கு செலுத்தப்பட வேண்டிய அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.30 ஆயிரமாகவும், பதிவு கட்டணம் ரூ.6 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார். #TNAssembly
    ×